Saturday, September 7, 2013

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் செரீனா – அசரென்கா



கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் அரை இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்தது.
உலகின் முதல் நிலை வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) – அரை இறுதியில் 5–ம் நிலை வீராங்கனையான லீ நாவை எதிர்கொண்டார். இதில் செரீனா வில்லியம்ஸ் 6–0, 6–3 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். அவர் 6–வது முறையாக இறு
திப் போட்டியில் நுழைந்துள்ளார். இதில் 4 முறை அவர் அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றுள்ளார். 1999, 2002, 2008, 2012–ம் ஆண்டுகளில் பட்டத்தை வென்றார். 2001, 2012–ம் ஆண்டுகளில் இறுதிப் போட்டியில் தோற்றார்.
17–வது கிராண்ட்சிலாம் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் செரீனா வில்லியம்ஸ் உள்ளார்.
செரீனா வில்லியம்ஸ் இறுதிப் போட்டியில் இரண்டாம் நிலை வீராங்கனையான விக்டோரியா அசரென்காவை சந்திக்கிறார்.
பெலாராசை சேர்ந்த அவர் அரை இறுதியில் 6–4, 6–2 என்ற நேர் செட் கணக்கில் பிளாவியா பெனாட்டை (இத்தாலி) தோற்கடித்தார். அசரென்கா 2–வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டை போலவே தற்போது இருவரும் இறுதிப் போட்டியில் மோதுகிறார்கள். கடந்த ஆண்டு தோற்றதற்கு இந்த முறை செரீனாவுக்கு அசரென்கா பதிலடி கொடுக்க காத்திருக்கிறார்.
ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் இன்று நடக்கிறது. ஒரு அரைஇறுதியில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் (செர்பியா) – ஒன்பதாம் நிலை வீரரான வாவெர்னிகா (சுவிட்சர்லாந்து) மோதுகிறார்கள். மற்றொரு அரைஇறுதியில் 2–ம் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) – 8–ம் நிலை வீரரான ரிச்சர்டு கேஸ்சியூட் (பிரான்ஸ்) மோதுகிறார்கள்

No comments:

Post a Comment