Saturday, September 7, 2013

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட இலங்கை விருப்பம்

பாகிஸ்தானில் கடந்த 2009-ம் ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 6 வீரர்கள் காயம் அடைந்தனர். அப்போது நடந்த மோதலில் 6 போலீஸ்காரர்கள் மற்றும் பொதுமக்கள் இரண்டு பேர் பலியாகினர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இலங்கை அரசு கிரிக்கெட் அணியை அனுப்புவதை நிறுத்தியது.


இதேபோல் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச போட்டிகள் எதுவும் பாகிஸ்தானில் நடைபெறவில்லை. பாகிஸ்தானுக்கான சர்வதேச போட்டிகள் அனைத்தும் வேறு நாடுகளில் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் விளையாட இலங்கை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் மந்திரி ஆஷன் இக்பாலிடம், இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியதாக பாகிஸ்தான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விரைவில் இலங்கை அணி பாகிஸ்தானில் சென்று விளையாடும் என்றும் ராஜபக்சே கூறியுள்ளார்.

ராஜபக்சே கூறியதுபோல் நடந்தால், தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல் அணி இலங்கையாக இருக்கும்

No comments:

Post a Comment