Saturday, September 7, 2013

அமெரிக்க ஓபன்: சானியா ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஓபன்: சானியா ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், இந்தியாவின் சானியா மிர்சா-சீனாவின் ஜீ செங் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.

மகளிர் இரட்டையர் காலிறுதி ஆட்டத்தில் 10-ம் தரநிலையில் இருக்கும் சானியா-சீ செங் ஜோடி, நடப்பு விம்பிள்டன் சாம்பியனான சு வெய்(தைபே)-பெங் சுவாய் (சீனா) ஜோடியை எதிர்கொண்டது.

இதில் 6-4, 7-6 என்ற நேர்செட்களில் சானியா ஜோடி வெற்றி பெற்றது.

அரையிறுதியில் சானியா-செங் ஜோடி, 8-ம் தரநிலையில் உள்ள ஆஷ்லேய் பார்ட்டி-கேசே டெல்லக்வா ஜோடியுடன் மோத உள்ளது. இந்த ஜோடி, காலிறுதியில் மகரோவா-வெஸ்னினா ஜோடியை வென்று அரையிறுதியை உறுதி செய்தது. 

இந்த வெற்றியின் மூலம், 4 மிகப்பெரிய தொடர்களிலும் மகளிர் இரட்டையர் பிரிவில் அரையிறுதி வரை முன்னேறியிருக்கிறார் சானியா.

இன்று நடைபெற உள்ள மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் வில்லியம்ஸ் சகோதரிகள், சாரா இரானி-வின்சி ஜோடியுடன் மோதுகின்றனர். இதில் வெற்றி பெறும் ஜோடி, அரையிறுதியில் ஹிலாவாக்கோவா-ஹிராடெக்கா ஜோடியுடன் விளையாடும்

No comments:

Post a Comment